தனுஷ் தற்போது மரியான் என்ற தமிழ் படத்திலும், ரஞ்சனா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மற்றுமொரு புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த படத்தைப் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்.
இந்த படத்தின் இயக்குனர் அனேகமாக புதுமுகமாகத் தான் இருப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
பரம ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வெளியானதும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய த்ரில்லாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருக்கும் என்கிறார் தனுஷ்.
நடிப்பதை தவிர படத் தயாரிப்பு பணியிலும் கால் வைத்துள்ளதால் தற்போதெல்லாம், மிகவும் பிசியாகவே காணப்படுகிறார் தனுஷ். |