நீர்ப்பறவை, கடல் படங்களைப் போன்று இந்த படமும் கடற்கரையோர மக்கள் சார்ந்த கதையில் உருவாகி வருகிறது.
கதைப்படி மீனவனாக நடிக்கும் தனுஷ், இரவு பகல் பாராமல் தன்னுடைய நடிப்பில் அசத்தி வருகிறாராம்.
உப்புக்காற்றை நீண்ட நேரம் சுவாசிக்க கஷ்டமாக உள்ளது என்று அனைவரும் சொன்ன போதும், அந்த மாதிரி வார்த்தை தனுஷ் வாயிலிருந்து மட்டும் வர மறுக்கிறதாம். அந்த அளவுக்கு ஒரு பரம்பரை மீனவனாகவே மாறிப் போயிருக்கிறாராம்.
மேலும், இப்படத்துக்காக தென் ஆப்பிரிக்காவிலுள்ள கடற்கரை பகுதிகளில் படமாக்கப்பட்ட போது சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் மணலில் விழுந்து புரண்டெல்லாம் நடித்தாராம் தனுஷ்.
அதைப்பார்த்து கலங்கிப்போன அப்படத்தின் நாயகியான பூ பார்வதி, எந்தவொரு பிரபல நாயகர்களுமே இப்படி நடிக்கத்துணிய மாட்டார்கள்.
அந்த வகையில் தனுஷ் மிகச்சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து விட்டார். அவர் போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப பெருமையாக உள்ளது என்று புகழ்ந்து தள்ளுகிறாராம். |