ராம்சரன் தேஜா நடிக்கும் தெலுங்கு படத்தில் குத்தாட்டம் போட படக்குழுவினர் ஸ்ருதியை அணுகியிருக்கின்றனர்.
இதற்கு நடிகை ஸ்ருதியும் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
ஆனால் இதனை ஸ்ருதி மறுத்துள்ளார். அவர் கூறியதாவது, தெலுங்கு படத்தில் குத்துப்பாட்டுக்கு நான் ஆடமாட்டேன்.
தெலுங்கில் ஹிட்டான "நூ ஒஸ்தண்டே நே ஒட்டன் டானா" படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.
இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இதில் நாயகியாக நடிக்கிறேன் என்றார்.
இப்படம் மூலம் ஸ்ருதி இந்தி மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ளார். |