இவர் ஆச்சார்யா என்ற படத்தை இயக்கியதன் மூலம் ஆச்சார்யா ரவி என்று பலராலும் அழைக்கப்பட்டார்.
ரவி அடுத்து இயக்கும் படத்துக்கு என்ன தான் பேசுவதோ என்று பெயரிட்டுள்ளார்.
இப்படத்தில் விஜய்ராம், தாஸ், ரோஷன், சின்னச்சாமி, மாஸ்டர் விக்னேஷ் ஆகிய ஐந்து புதிய கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக தக்ஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
படம் குறித்து இயக்குனர் ரவி கூறுகையில், சிறுவயதில் பெண் குழந்தைகள் ஏலத்தில் விற்கப்பட்டு வயது வந்த பின்பு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் ஒரு கிராமம்.
இது பீகார் மாநிலத்தில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அப்படி ஏலத்தில் விற்கப்பட்ட பெண் பீகாரிலிருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
அப்படி வந்த பெண்ணுக்கும் 5 மாணவர்களுக்கும் நட்பு வளர்கிறது. அவள் இருக்கும் இடம் அறிந்து பிகாரிலிருந்து வரும் கும்பல் அவளை இழுத்துப் போகிறார்கள்.
அவளது பின்னணி தெரிந்த மாணவர்கள் அதிர்ந்து போகிறார்கள் என்றும் இங்கிருந்து பீகார் போய் அந்தப் பெண்ணை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதை எனவும் கூறியுள்ளார். |