கொலிவுட்டில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் தயாராகி வெற்றி பெற்ற `சட்டம் ஒரு இருட்டறை'.
இப்படம், மீண்டும் தயாராகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சினேகா பிரிட்டோ இயக்குகிறார்.
இந்த படத்தில் தமன் குமார் கதாநாயகனாக நடிக்க பியா, பிந்து மாதவி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
படத்தின் முக்கிய காட்சிகள் சீனாவின் ஹொங்காங்கில் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஹொங்காங்கில் உள்ள லாஸ்வேகாஸ் என்ற பகுதியின் இரவு நேர அழகை ஒரு ஹெலிகொப்டர் மூலம் படமாக்கினார்கள்.
பியா, பிந்து மாதவி இருவரும் ஹெலிகொப்டரை பிடித்துக்கொண்டு தொங்குவது போன்ற காட்சியை படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு பேரும் கீழே விழுந்தார்கள்.
அதில் இருவரும் படுகாயம் அடைந்தார்கள். ஹெலிகொப்டர் மிக குறைந்த உயரத்தில் பறந்ததால், இருவரும் உயிர் தப்பினார்கள்.
பின்னர் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. பியா, பிந்து மாதவி இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளிக்கப்பட்டது. |