இப்படத்தில் சகுனி நாயகன் கார்த்தி கதாநாயகனாகவும், மயக்கம் என்ன படநாயகி ரிச்சா கங்கோத்பாய் நடிக்கின்றனர்.
இவர்களுடன் இப்படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமாப்பிள்ளை பிரசன்னாவும் நடிக்கவுள்ளார்.
படப்பிடிப்பு அடுத்தமாதம் தான் தொடங்குகிறது. இருப்பினும் நாளை ஆடி மாதம் பிறக்க இருப்பதால் சின்னதாக இன்று ஒரு பட பூஜை நடத்தியுள்ளனர்.
தற்போது படத்திற்கான மற்ற நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீசியன்கள் வேலைகள் நடந்து வருவதாகவும், எல்லாம் தெரிவானதும் விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். |