அடுத்தடுத்து வரிசையாக பல படங்களில் நடித்து, ரசிகர்களால் 'சின்னத்தளபதி' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
தனக்கு நெருக்கமான விசுவாசிகளோடு பிறந்த நாளை கொண்டாடுவதை பரத் வழக்கமாக வைத்துள்ளதாக பட வட்டாரம் கூறுகிறது.
வருடந்தோறும் பல திசைகளில் இருந்து அலைபேசி குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிய பரத் உற்சாகத்தில் நீந்தியிருக்கிறார்.
நான் என் பிறந்த நாளை பெற்றோர், நண்பர்கள், நெருக்கமான தோழிகள், சினிமாவில் என்னுடன் பணியாற்றியவர்கள் என் பாசத்துக்கும் நேசத்துக்கு உரிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழும் நாளாகவே கருதுகிறேன்.
அடுத்த பிறந்த தினம் வருவதற்கு முன், பட உலகின் வெற்றிகரமான நாயகனாக உருவெடுப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
இப்போது இயக்குனர் சசி சாருடன் இணைந்து '555' வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என்று பரத் தெரிவித்துள்ளார். |