பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹேமாமாலினி.
இவரது மகள் ஈஷா தியோல் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ஆய்த எழுத்து படத்தில் நடித்துள்ளார்.
இவருக்கும் பிரபல தொழிலதிபர் பாரத் தஹ்தானிக்கும் இன்று மும்பையில் திருமணம் நடைபெற்றது.
மும்பை, ஜூஹூவில் உள்ள இஸ்கான் கோயிலில் தென்னிந்திய முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. சிலகாலமாக காதலித்து வந்த இத்தம்பதியினர் இந்த ஆண்டு பிப்ரவயில் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் தவிர, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக், மனோஜ் குமார், வினோத் கன்னா, வைஜெயந்திமாலா, ரமேஷ் சிப்பி, ஃபர்தீன் கான், பூனம் சின்ஹா, அனுமாலிக் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பை புறநகர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நாளை நடைபெறுகிறது. இதில் திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். |