இப்படத்தின் கதாநாயகனாக வம்சி கிருஷ்ணன், கதாநாயகியாக ரூச்சிகா பாபர் மற்றும் பவித்ரா லோகேஷ், பரணி, விஸ்வநாத், ஹபீப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
அனாதையாக வளர்ந்த நாயகன் வம்சி, தன் சொந்த முயற்சியில் கஷ்டப்பட்டு IAS பயிற்சி முடித்த பின்பும் IAS தேர்வு எழுத ஒரு வருடம் தள்ளிப் போடுகிறான்.
எதற்காக IAS தேர்வை நிராகரித்தான். அவனுடைய தாய், தந்தை யார்? அவனை ஏன் அனாதையாக ஆக்கினார்கள். அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் திரைக்கதை.
அதற்கான முயற்சியில் இறங்கி கிடைத்த ஆதாரத்தினை கொண்டு காரைக்கால், ஹைதராபாத், கோவா, மும்பை போன்ற இடங்களில் தேடி அலைகிறான்.
அவனுடைய இந்த முயற்சியில் உறுதுணையாய் இருந்த பெண், பிறகு காதலியாய் வந்து அவனுக்கு முக்கிய பங்களிக்கிறாள். அவன் தாய் தந்தை கிடைத்தார்களா? IAS தேர்வு எழுதி வெற்றி பெற்றானா என்பது தான் க்ளைமாக்ஸ்.
இப்படத்தின் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெறுகிறது. இப்படத்தில் இசையமைப்பாளர்கள் S.K. பாலசந்திரன் இசையமைத்துள்ளார். இவர் கள்ளத்துப்பாக்கி படத்தில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்கால், ஹைதராபாத், கோவா, மும்பை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் ஓகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஆனந்த் ரவி, ஒளிப்பதிவு: ஷம்தத், இசை: S.K. பாலசந்திரன், பாடல்கள்: தமிழமுதன், எடிட்டர்: K. அனில், மக்கள் தொடர்பு: S.செல்வரகு, தயாரிப்பாளர்: வம்சி கிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள்.


|