ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நாளை நடைபெற உள்ளது.
இவ்விழாவுக்கு இசைஞானி இளையராஜா தலைமை தாங்குகிறார்.
அறிமுக நடிகர் லட்சுமணன், கார்த்திகா, பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் தொடக்கவிழாவை படத்தின் வெற்றி விழாவைப் போல் தேனி அல்லி நகரத்தில் விமரிசையாக பாரதிராஜா கொண்டாடியது நினைவிருக்கலாம்.
அதேபோல் பாடல்கள் வெளியீட்டு விழாவையும் மதுரையில் நடத்துகிறார்.
இளையராஜா தலைமை தாங்கும் இந்த விழாவில் முதல் பாடல்கள் குறுந்தகடை மணிரத்னம் வெளியிட பாலுமகேந்திராவும், மகேந்திரனும் பெற்றுக் கொள்கின்றனர்.
ட்ரெய்லரை கே.பாக்யராஜ், கங்கை அமரன், விக்ரமன் வெளியிட நடிகர் வடிவேலு உள்ளிட்டவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். |