மனம் கொத்திப் பறவை வெற்றியை இயக்குனர் எழில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து விட்டார். இப்படத்திற்காக முன்னணி கதாநாயகர்களை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக எழில் தெரிவித்தார்.
இப்புதிய படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ற ஊடகத்தினரின் கேள்விக்கு பதிலளித்த எழில், நடிப்பு என்பது பெரிய கலை ஆகும். எனவே எனக்கு தெரிந்த இயக்குனர் துறையே போதும் என்றார்.
மற்ற இயக்குனர் நடிக்க வந்துள்ளது பற்றி எழில் கூறியதாவது, அவர்கள் அனைவரும் இரட்டை குதிரை சவாரி செய்ய தெரிந்தவர்கள்.
எனக்கு ஒரு குதிரை சவாரியே போதுமென நினைக்கின்றேன் என்று கூறினார்.
இளையதளபதி விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், அஜித் குமார் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படங்களை இயக்கியவர் எழில் என்பது குறிப்பிடத்தக்கது. |