இந்நிலையில், நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள “ஹரிதாஸ்” படத்தில் இவரது நடிப்புக்கு கிடைத்து வரும் பாராட்டுக்களால் பூரித்து போயிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, நல்ல கதையம்சமுள்ள படங்களை தெரிவு செய்து தமிழ், தெலுங்கு என்று நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தெரிவு செய்து நடிப்பதால் பாராட்டு கிடைப்பதோடு அடுத்தடுத்து, நல்ல வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
இதனால், என் இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களாக நடித்து, திரையுலகில் எனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பேன் என்கிறார். |