MailPrint
ரூ.4 கோடியில் பூலோகத்தின் கிளைமேக்ஸ்
[ Saturday, 09 February 2013, 10:44.14 AM GMT +05:30 ]
கொலிவுட்டில் ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் பூலோகம் படத்தை ஒஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து வருகிறது.

இதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, சென்னையில் இருந்து ஆயிரம் துணை நடிகர் நடிகைகள், 4 ஆயிரம் மாணவர்கள், 150 விளையாட்டு வீரர்கள் நடித்து வருகிறார்கள்.

இதனால் படப்பிடிப்பு நடக்கும் இடம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. கடைசி நான்கு நாட்கள் ஹாலிவுட்டிலிருந்து வரும் சண்டைக் கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

பூலோகம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு மட்டும் ரூ.4 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், இதன் மொத்த பட்ஜெட் ரூ.15 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.