பாலிவுட்டில் தனுஷ், சோனம் கபூர் நடிக்கும் படம் ராஜ்னா. இப்படத்தை ஆனந்த் ராய் இயக்குகின்றார்.
இதில் தனுசும் சோனம் கபூரும் பள்ளி மாணவர்களாக நடிக்கின்றனர்.
தற்போது ராஜ்னா படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வருகின்றது. பள்ளிக்கூட ஆடையில் இருவரும் நடிப்பதால் அவர்கள் சினிமா நடிகர், நடிகை என்பது அங்குள்ள நபர்களுக்கு தெரியவில்லையாம்.
இது பற்றி ஆனந்த் ராய் கூறியதாவது, கடந்த சில நாட்களாக வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. ஊரில் அவ்வளவு கூட்டம் இருந்தாலும் இருவரையும் யாரும் அடையாளம் கண்டுகொள்ள வில்லை என்றார்.
இதற்கு முன்பு துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 3 படங்களில் தனுஷ் பள்ளி மாணவராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. |