தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வாலின் காதல் அனுபவங்கள் குறித்து கேட்டபோது, முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், "மும்பையில் நட்புடன் பழகுவதென்பது சாதாரண விடயம். என்னுடன் நட்பாக பழகுபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதே நேரம் என்னிடம் நிறைய உரிமை எடுத்துக் கொண்டு பழகுவது பிடிக்காது. என்னுடன் நடிக்கும் சக நாயகர்களுடன் நட்பு ரீதியிலேயே பழகுகிறேன்.
அவர்கள் மும்பை வந்தால் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுவேன். அந்த எல்லையை தாண்ட மாட்டேன். ஆண் நண்பர்களால் எனக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அதற்காக நான் அழுதும் இருக்கிறேன். எனக்கு இரண்டு பேரிடம் தீவிரமான நெருக்கம் இருந்தது. அதில் ஒருவரிடம் நடிகையாவதற்கு முன்பே பழகினேன்.
இந்த தொடர்புக்காக நிறைய நேரம் ஒதுக்கவேண்டி இருந்ததனால் அதை முறித்துக்கொண்டு விலகி விட்டேன். பின்பு நடிகையான பின் மற்றொருவரின் உறவையும் துண்டித்துக் கொண்டேன்" என்றார்.
மேலும் தற்போதுள்ள கதாநாயகர்களில் விஜய்யை அதிகம் பிடிக்குமெனவும் காஜல் தெரிவித்துள்ளார். |