கடந்த டிசம்பர் 17ம் திகதி அன்று நன்றாக குடித்து விட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் கூடியிருந்தபோது அவர் இந்த செயலை செய்தார்.
இது அங்கிருந்த கமெராவில் பதிவாகி உள்ளதனை தொடர்ந்து கடந்த மாதம் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பொலீசார் வரும் வரை அவருக்கு பின்னால் பயணிகள் நின்று கொண்டு இருந்தது வீடியோவில் பதிவு ஆகியுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தை தொடக்கத்தில் அவர் மறுத்தார்.
தற்போது இந்த வழக்கு வருகிற ஜனவரி 7ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் பெல்லட்டியர்ஸ் மீது ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்படுவதுடன், 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. |